வியாழன், 17 நவம்பர், 2016

கணித்தமிழின் வளங்கள்: அலைபேசியில் ஒருங்குகுறி தமிழ் உள்ளீடு (Tamil input for mobile phones)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766

தமிழ் விசையை (Android TamilKey) addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி அமைப்பு நிலையில் (settings) மொழி மற்றும் உள்ளீடு (Languaguage and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம். செல்லினம் (Sellinam) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam  ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி அமைப்புகள் (settings) என்னும் பகுதியில் மொழி மற்றும் உள்ளீடு (Language and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு, தமிழ் ஒலிபெயர்ப்பு (ஆங்கில எழுத்துக்கள்) ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம். சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம் அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை மின்னஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி. இதன் வழி, அலைபேசியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்புக்கள் ஆகியன உள்ளன.


ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கிண்டாசுக் கணிப்பொறிகளில் மட்டுமின்றி ஐ-போன், ஐ-பேட், ஐ-பாட் டச் மற்றும் ஆப்பிள்-டிவி கருவிகளிலும் முரசு அஞ்சலில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எச்.டி.சி. நிறுவனம் அவர்களின் (ஆண்டிராய்டு வகை) கையடக்கக் கருவிகளிலும் செல்லினத்தின் கூறுகள் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. எச்.டி.சி. நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எசின் (iOS 7) ஏழாம் பதிப்பிலும் "முரசு அஞ்சல்", "தமிழ் 99" ஆகிய இரண்டு தமிழ் விசைமுக அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime&hl=en என்னும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கையெழுத்து உணரி வாயிலாக கையினால் எழுவதின் மூலம் தமிழில் உள்ளீடு செய்யலாம். youtube.com/watch?v=D7wnsG6jIcI, youtube.com/watch?v=Ie9SqmaMwDw என்னும் இணைப்புகளின் வாயிலாக தமிழ்த் தட்டச்சினைக் கற்கலாம்.


கணித்தமிழின் வளங்கள்: தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களின் தரவிறக்கம்

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766

தமிழ் நாடு மின்னணுக்கழகம் வழங்கும் தமிழ் எழுத்துருக்களை .elcot.in/tamilfonts_download_list.php என்னும் இணைப்பில் பெறலாம்.      தேசியத் தகவலியல் நடுவம் வழங்கும் தமிழ் எழுத்துருக்களை tn.nic.in/tamilsw/otf.htm என்னும் இணைப்பில் பெறலாம்.   தெற்காசிய மொழிவள நடுவம் வழங்கும் தமிழ் எழுத்துருக்களை.tn.nic.in/tamilsw/otf.htm  என்னும் இணைப்பில் பெறலாம்.      தமிழ் ஒருங்குகுறி எழுத்துக்கூடம் தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை salrc.uchicago.edu/resources/fonts/available/tamil/ என்னும் இணைப்பில் பெறலாம்

கணித்ததமிழின் வளங்கள்: எழுத்துரு மாற்றிகள் (Tamil Unicode converters)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766

தமிழ் எழுத்துரு மாற்றிகள் என்பது மரபார்ந்த தமிழ் எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியாகவும், தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை மரபார்ந்த எழுத்துருக்களாகவம் மாற்றப்பயன்படும் மென்பொருட்கள் ஆகும்.பொங்கு தமிழ் என்னும் suratha.com/reader.htm வலைதளத்தில் இண்டோவேர்டு (Indoweb), முரசொலி (Murasoli), வெப் உலகம் (Webulagam), தினத்தந்தி (Thinathanthi), தினமணி (Dinamani), தினபூமி (Thinaboomi), அஞ்சல்(Anjal), தட்ஸ் தமிழ் (Thatstamil)(LIBI), அமுதம்(Amudham/Dinakaran), மயிலை (Mylai), விகடன் (Vikatan (old)), டேப் (Tab), டேம்(Tam) குமுதம்/ விகடன் (kumudam/vikatan) பாமினி (Bamini), டிஎஸ்சி (TSC), ரோமனைஸடு (Romanised), கோல்ன் (koeln), அனு கிராபிக்ஸ் (anu Graphics (Pallavar)), நக்கீரன் (nakkeeran(senthamizh)) ஆகிய எழுத்துருக்களை ஒருங்குகுறித்தமிழில் எழுத்துரு மாற்றம் செய்யலாம்; இதனால் மரபான எழுத்துருக்களை ஒருங்குகுறியில் மாற்றி பல வகைகளில் இந்த பனுவல்களாகப் பயன்படுத்தலாம். என்ஹெச்எம் கன்வெர்ட்டர் (NHM Converter) http://software.nhm.in/products/converter என்னும் இம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து, அவதை கணிப்பொறியில் நிறுவினால் பாமினி, டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம், திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களை தமிழ் ஒருங்குகுறியிலும் தமிழ் ஒருங்குகுறி எழுத்துருக்களை பாமினி, டையகிரிடிக், ஸ்ரீலிபி, சாஃப்ட்வியூ, டேப், டேம், திசுகி, ஒருங்குகுறி, வானவில் ஆகிய எழுத்துருக்களாகவும் மாற்ற இயலும். கண்டுபிடி kandupidi.com/converter/ என்னும் வலைத்தளத்தில் செயல்படும் நேரலை ஒருங்குகுறி மாற்றியைப் பயன்படுத்தி, திசுகி (TSCII), டேப் (TAB), ஆங்கில ஒலிப்பெயர்ப்பு (Romanised), அஞ்சல் (Anjal), மயிலை (Mylai),முரசொலி (Murasoli), தினத்தந்தி (Dinathanthy) பாமினி(Bamini), டேம் (TAM), பூமி (Boomi), தினமணி (Dinamani), தினகரன் (Dinakaran), நக்கீரன் (Nakkeeran) , கவிப்பிரியா (Kavipriya) ஆகிய எழுத்துருகளை தமிழ் எழுத்துருவில் மாற்றலாம்.

கணித்தமிழின் வளங்கள்: இணைய தமிழ் தட்டச்சுப்பொறிகள் (Online Tamil Unicode typing portals)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


டபல்யூ3தமிழ் (w3tamil) wk.w3tamil.com/ இம்மென்பொருள் ஒருங்குகுறித்தமிழை தமிழ்99 என்னும் விசைப்பலகை முறையை மட்டும், வலைத்தளத்தில் தட்டச்சு செய்துபழகும் வகையில் நேரலை விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. இவ்வலைதளத்தை தமிழ்99 தட்டச்சுப்பயிற்சிக்குப் பயன்படுத்தலாம். தமிழ்த்தட்டச்சு எழுதி suratha.com/unicode.htm என்னும் இம்மென்பொருள் தமிழ் ஒலிபெயர்ப்பு (thaminglish), பாமினி (Bamini), அமுதம் (amudham), தமிழ்99 (Tamilnet99)ஆகிய தமிழ் உள்ளீட்டுமுறைகளில் தமிழ் தட்டச்சிற்கு வழிவகை செய்துள்ளது. ஹாய் கோபி என்னும்.higopi.com/ucedit/Tamil.html இம்மென்பொருள் ஆங்கிலம் (English), தமிழ் (Tamil Phonetic), தமிழ்99 விசைப்பலகை (Tamil99 Keyboard), பாமினி விசைப்பலகை (Bamini Keyboard), வானவில் ( Vaanavil Keyboard), மாடுலர் (Modular Keyboard), தமிழ் தட்டச்சுப்பொறி (Tamil Typewritter) ஆகிய முறைகளில் ஒருங்குகுறியில் தமிழ்த்தட்டச்சு செய்யலாம். தமிழ் என்னும் tamil.sg/ இம்மென்பொருள் நேரலையில் ஒலிபெயர்ப்பு (Romanised), தட்டச்சுப்பொறி (Typewriter), ஒலிபெயர்ப்பு (Phonetic2) தமிழ்99 (Tamil99) ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குகுறி தட்டச்சு செய்ய (உள்ளீட்டிற்கு) உதவுகின்றது

கணித்தமிழின் வளங்கள்: தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள் (Tamil Unicode softwares)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


தமிழ் ஒருங்குகுறி எழுதிகள்/ விசைப்பலகைகள் (Tamil Unicode writers and keyboards) என்னும் மென்பொருட்கள் கணிப்பொறிகளில் ஒருங்குகுறி தமிழ் தட்டச்சு செய்வதற்காக உருவாக்கப்பெற்றுள்ள மென்பொருட்கள் ஆகும். இந்த மென்பொருட்களை கணிப்பொறியில் மிக எளிதாக நிறுவலாம். கணிப்பொறிகளிலும், மடிக்கணிப்பொறிகளிலும் ஒருங்குகுறி தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி (installation) தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம்.

என்ஹெச்எம் ரைட்டர், (NHM Writer) software.nhm.in/products/writer என்னும் இம்மென்பொருளைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி (installation) தமிழ்99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (transliteration), தமிழ் பழைய தட்டச்சுப்பொறி (Old typewriter), பாமினி, தமிழ் இன்ஸ்கிரிப்ட் (Inscript), தமிழ்99 டேஸ், தமிழ் ஒலிபெயர்ப்பு டேஸ் (TACE) ஆகிய முறைகளில் தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். தமிழ் விசை (Tamil Visai) என்னும் மென்பொருளை தரவிறக்கம் (download) செய்து ஃபயர் பாக்சில் தமிழ் ஒருங்குகுறியில் தட்டச்சுசெய்யப் பயன்படுத்தலாம். இ-கலப்பை, (e-Kalappai) http://thamizha.org/ இம்மென்பொருளை தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். இம்மென்பொருளில் தமிழ்99 (Tamil99), தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (Phonetic), தட்டச்சுப்பொறி (Typewriter), பாமினி (Bamini), இன்ஸ்கிரிப்ட் (Inscript) ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குகுறியை உள்ளீடலாம்.

கணித்தமிழின் வளங்கள்: தமிழ்99 விசைப்பலகை


மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


கணிப்பொறி, அலைபேசி உள்ளிட்ட மின்னணுக்கருவிகளில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு அதற்குரிய மென் பொருட்களை நாம் நிறுவ (install) வேண்டியுள்ளது. எனவே தன்னார்வத்தின் அடிப்படையில் பலர் தமிழ் மென்பொருட்களை நிறுவியப்பின் தமிழ் தட்டச்சினை தங்கள் கணிப்பொறிகளில் பயன்படுத்தி வருகின்றனர். இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும், தமிழ் உள்ளீடு (input)மிகத்தேவையான ஒன்றாகும். கணிப்பொறிகளிலும் அலைபேசிகளிலும் பலகைக் கணிப்பொறி (tablet) போன்ற இதரக்கருவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய வழிமுறைகளையும் தமிழ் மின்னூலக வளங்களையும்  அறிய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 தமிழ்99 விசைப்பலகையின் சிறப்புகள்: 

மாற்று விசைப்யைப் (shift key) பயன்படுத்தாமலேயே தமிழில் தட்டச்சு செய்யலாம். தமிழ் எழுத்துக்களை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றோமோ அதே அடிப்படையில் இவ்விசைப்பலகை அமைந்துள்ளது. அதாவது, உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் சேர்ந்தால் உயிர்மெய் என்னும் முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைக் காட்டிலும் விரைந்து தட்டச்சு செய்யலாம்.


 தமிழ்99 விசைப்பலகையின் அமைப்பு



தமிழ்99 விசைப்பலகை

கணித்தமிழின் வளங்கள்: தமிழகம்.வலை

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


கணிப்பொறி, அலைபேசி உள்ளிட்ட மின்னணுக்கருவிகளில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு அதற்குரிய மென் பொருட்களை நாம் நிறுவ (install) வேண்டியுள்ளது. எனவே தன்னார்வத்தின் அடிப்படையில் பலர் தமிழ் மென்பொருட்களை நிறுவியப்பின் தமிழ் தட்டச்சினை தங்கள் கணிப்பொறிகளில் பயன்படுத்தி வருகின்றனர். இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும், தமிழ் உள்ளீடு (input)மிகத்தேவையான ஒன்றாகும். கணிப்பொறிகளிலும் அலைபேசிகளிலும் பலகைக் கணிப்பொறி (tablet) போன்ற இதரக்கருவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய வழிமுறைகளையும் தமிழ் மின்னூலக வளங்களையும்  அறிய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

தமிழகம்.வலை: thamizhagam.net என்னும் இவ்விணையத்தில் 3000க்கும் மேற்பட்ட தமிழ் மின்னூல்களின் மென்படிகளும் கணித்தமிழின் வளங்களை இவ்விணையம் தொகுத்து அளிக்கப்பெற்றுள்ளன.

அறிவுச்சிறகு விரி: கட்டற்ற மென்பொருட்கள்

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


நாம் இலட்சக்கணக்கில் செலவிட்ட பயன்படுத்தும் மென்பொருட்கள் ஒரு காசு செலவின்றி கிடைக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா? இத்தைகைய மென்பொருட்கள் குறித்து அறிவது நம்மை ஓர் விடுதலை உலகிற்கு இட்டுச்செல்கின்றது.

மென்பொருட்களின் பயன்பாட்டு உரிமைகளைத் தெரிந்து கொள்வது ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் பயன்பாட்டையும் அவற்றின் மேம்படுத்துதலுக்கும் உதவும் ஒன்றாகும். மென்பொருட்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம் அவை 1. (proprietary software) மென்பொருட்கள் எனவும் 2. கட்டற்ற மென்பொருள் (free software) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

மென்பொருட்களை கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதற்கான உரிமைகளை படைப்பாக்கப் பொதுமம் (creative commons) குனு (GNU) என்று இரு வகைப்படும். கட்டற்ற மென்பொருட்கள் நான்கு வகையான தளையறு நிலைகளைப் பயனர்களுக்கு வழங்குகிறது. இவற்றில் படைப்பாக்கப் பொதுமம் என்பது நூல்கள், ஒளிப்படங்கள், அசைவூட்டப்படங்கள், காணொலிகள், ஒலிக்கோப்புகள் போன்றவற்றிற்கு வழங்கப்பெறும் படைப்பாக்கப் பொதும உரிமம் ஆகும். மென்பொருட்களுக்கு வழங்கப்படும் படைப்பாக்கப் பொதும உரிமம் குனூ ஆகும்.
படைப்பாக்கப் பொதும உரிமம் CC BY SA (creative commons share alike)என்று குறிக்கப்பெறுகின்றது. CC BY SA படைப்பாக்கப் பொதும உரிமம் 1.0 என்று தொடங்கி 2.0. 3.0, 4.0 என்று அதன் பதிப்பு வடிவங்கள் மாற்றமடைந்துள்ளன. குனு (GNU) என்னும் உரிமம் 1.0, 2.0 ஆகிய பதிப்பு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளைத் தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை ஆகும்.    தளையறு நிலை 1  என்பது, மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை ஆகும். ஆணை மூலத்தைப் பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன் நிபந்தனை ஆகும்.   தளையறு நிலை 2  என்பது, நகல்களை மீள வழங்க செய்வதற்கான தளையறு நிலை ஆகும். இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.     தளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளைப் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை ஆகும். இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மென்பொருள்களின் நிரல் மூலம் (source code) பார்வைக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இதற்கான முன்நிபந்தனை ஆகும்.

எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, படியெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு பகிர்வு செய்யப்படக்கூடிய மென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கொள்கையாகும். கட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் (proprietary software). மென்பொருட்களை விலைக்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல.

பொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக வழங்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு வழங்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே வழங்கப்படுகிறது.

அச்சு, ஊடகப்பணிகளின் பொருட்டு பயன்படுத்தப்படும் கோரல்டிரா, போட்டோசாப், இல்லசுட்டுரேட்டர் ஆகிய மென்பொருட்களை ஆயிரக்கணக்கில் செலவு செய்து நாம் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளது. ஆனால் இம்மென்பொருட்களுக்கு இணையாக கட்டற்ற முறையில் ஒளிப்படத்தொகுப்புப் பணிகளுக்காக ஜிம்ப் -https://www.gimp.org/  என்னும் கட்டற்ற மென்பொருளும், கோரல்டிராவிற்கு இணையாக வரைலைப்பணிகளின் பொருட்டு https://inkscape.org/en/ என்னும் மென்பொருளையும் அசைவூட்டப்படங்களின் தொகுப்புப் பணிகளுக்காக மாயா என்னும் மென்பொருளுக்கு நிகராக https://www.blender.org/ என்னும் மென்பொருளினையும் பயன்படுத்தலாம். நம் இல்லத்திற்கான அழகிய வடிவமைப்பினை http://www.sweethome3d.com/ என்னும் மென்பொருளினால் செய்யலாம்.


நம்மை கட்டற்ற உலகிற்கு அழைத்துச்செல்ல ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் காத்திருக்கின்றன. அவற்றை அறிவோம், பகிர்வோம், அறிவாயுதங்களை உருவாக்கும் மென்பொருட்களை உருவாக்குவோம்.

புதன், 16 நவம்பர், 2016

தமிழில் அகர வரிசை எளிதில் அமைக்கலாம்


தமிழில் எளிதில் அகர வரிசை அமைக்கலாம்…

வருகைப்பதிவேடு ஆகட்டும் அல்லது நாம் அணியப்படுத்தும் பட்டியல் ஆகட்டும் எப்போதும் அகர வரிசையில் அது அமைக்கப்படுமானால் அதில் எப்போதும் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால் நமக்கு இருக்கும் இடர்பாடு, ஆங்கிலம் எனில் நொடிப்பொழுதில் செய்துவிடுபவர்கள் கூட தமிழில் செய்ய தயக்கமும் குழப்பமும் அடைகின்றனர். ஆங்கிலத்தில் 26 எழுத்து எனவே அகர வரிசை (Alphabet) என்பது மிக எளிது ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளனவே. அது கடினமல்லவா என இனி அஞ்ச வேண்டாம்.
கணினி தொழில் நுட்பத்தின் உதவியால் இனி தமிழில் அகர வரிசை செய்வது அப்படி ஒன்றும் கடினமான செயலே அல்ல.

ஆம்…

நீங்கள் அகர வரிசை செய்யவேண்டிய சொற்களை வரிசைப்படுத்துங்கள். அச்சொற்கள் நிச்சயமாக ஒருங்குறி எழுத்தில் இருப்பது கட்டாயம். ஒருங்குறி எழுத்தெனப்படுவது வேறொன்றும் இல்லை Unicode Characters என சொல்வோம் இல்லையா அவைதான்.
பொதுவாகவே நாம் கைபேசி, டேப் ஆகிவற்றில் உள்ளீடு செய்வது ஒருங்குறி எழுத்தாகவே பதிவாகிறது. கணினியில் நீங்கள் வேறெந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தாலும் அதை நீங்கள் ஒருங்குறி எழுத்தில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான தளங்கள் நிறையவே உள்ளன.

சரி ஒருங்குறி எழுத்தில் தட்டச்சு செய்யபட்ட பட்டியலினை தேர்வு செய்து கொள்ளுங்கள். MS word எனில் மெனு பார் சென்று அங்கே ஆங்கில்லத்தில் செய்வது போன்றே A-Z என்ற தேர்வை சொடுக்குங்கள். நொடிப்பொழுதில் உங்கள் பட்டியல் அகர வரிசை செய்யப்பட்டதை அறிவீர்கள்.

சிறப்பு எழுத்துக்கள், அதாவது எண்களை முதலாவது கொண்டிருக்கும் சொற்கள் மற்றும் வடமொழி எழுத்துகளை முதல் எழுத்தாக கொண்டுள்ள சொற்கள் தனியாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளதை காண்பீர்கள்.

MS word மட்டுமல்ல MS excelலும் இதனை எளிதாக செய்ய முடியும்.  வருகைப் பட்டியல், அட்டவணை, பொருளடக்கப் பட்டியல், தேர்வு செய்யப்பட்ட பெயர்கள், முடிவு அறிவிப்பு என  சார்பற்ற பார்வையோடு வெளியிட, அகர வரிசைப்படுத்தும் முறைகள் நமக்குத் தேவைப்படும். எனவே இந்த வசதியினை நாம் பயன்படுத்தி நமது தமிழ் உள்ளீட்டினை செம்மைப்படுத்துவோம்

மேலும் ஐயங்கள் இருப்பின் இந்த காணொலியினை பாருங்கள். எளிமையாக புரிந்து கொள்வீர். வாழ்த்துகள்


  • சிவ. தினகரன், ஆய்வுத்தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 25

செவ்வாய், 15 நவம்பர், 2016

கான் கல்விக் கழக காணொலிகள்: தமிழாக்க பணிகளின் ஒளி வீச்சு

தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்று வரும், கான் கல்விக் கழக காணொலிகளின்  தமிழாக்க பணிகளின்  ஒளி வீச்சு

படத்தொகுப்புப் பணியில் பொறிஞர் சுதர்சன்

படத்தொகுப்புப் பணியில் பொறிஞர் சுதர்சன்

படத்தொகுப்புப் பணியில் திரு சந்தோஷ்

குரல் பதிவுப் பணியில் திரு இராஜேஸ்

சத்தியமங்கலத்தில் கான் கல்விக் கழக காணொலிகளின் முன்னாய்வுப் பணிகள்

தமிழ் இணையக் கல்விக்கழகம், கான் கல்விக் கழக காணொலிகளுக்கு தமிழ் ஒலி வடிவம் அளித்து வருகிறது. இந்த முயற்சியை செம்மையாக நிறைவேற்றும் வகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், தமிழில் உருவாக்கப்பட்ட காணொலிகள் ஒலிபரப்பட்டு, பின்னூட்டம் பெறப்படுகிறது.

மாக்கம்பாளையம், ( மலைக்கிராம் ) சத்தியமங்கலம் (வனப்பகுதி ), ஈரோடு மாவட்டத்தில் 27.05.16 முதல் 29.05.2016 வரை கள ஆய்வு செய்யப்பட்டது.

மாக்கம்பாளையத்தில் ஊராளி இனக்குழுவினரிடையே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்களிடையே  ஊராளி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.






கான் கல்விக்கழக தமிழ்க் காணொலிகளின் முன்னாய்வு

கான் கல்விக்கழக தமிழ்க் காணொலிகளின் முன்னாய்வு தருமரியிலுள்ள பச்சைமுத்து மகளிர்  கலை அறிவியல் கல்லூரியல் 5.8.2016 அன்று நிகழ்ந்து.







கான் கல்விக்கழக தமிழ் காணொலிகளை பின்வரும் இணைப்பில் காணலாம் https://www.youtube.com/user/KhanAcademyTamil

கான் கல்விக்கழக காணோலி உருவாக்கத்தில் பங்கேற்க வாருங்கள்


இதுவரையிலும், 43 மணி நேரம் ஒட கூடிய கல்வி சார்ந்த கான் காணொலிகளை, தமிழுக்கு மொழிமாற்றம் செய்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகத்தில் உள்ள, தமிழை தாய் மொழியாய் கொண்டுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. https://www.youtube.com/user/KhanAcademyTamil
மேலும், கல்வி கற்கும் முறையை மேம்படுத்திடும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் வழங்கப்பட உள்ளது.
தொடர்புக்கு :
திரு. மா. தமிழ்ப்பரிதி
உதவி இயக்குநர்,
7299397766

திரு. சிவ .தினகரன்
ஆய்வு தகமையர்,
7871336611
திரு. வ .கெளதமராஜன்,
ஆய்வு வளமையர்,
9003573957

கான் கல்விக்கழகம் ( கான் அகாடமி) ஒரு அறிமுகம்

கான் கல்விக்கழகம் ( கான் அகாடமி) என்பது    வணிக நோக்கமற்ற கல்வி நிறுவனமாகும். இதன் முக்கிய நோக்கம் "இலவசமாக உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும், எங்கும் தருவதாகும். கான் கல்வி நிறுவனம், கணிதம், அறிவியல், கலைபுலம், வரலாறு, பொருளாதாரம் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட பொருண்மைகளை உள்ளடக்கிய கல்விச் சார்ந்த, 8658 காணொலிகளை ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் ( தமிழக அரசின் தன்னாட்சி நிறுவனம் ), வெற்றிவேல் அறக்கட்டளை மற்றும் கான் கல்விக் கழகத்துடன் இணைந்து, மும்முனை புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையில்,  சிறப்பு கவனத்துடன் ஆங்கிலத்தில் உள்ள காணொலிகளை, தமிழிக்கு மொழிபெயர்ப்பு செய்து, தமிழ் ஒலி வடிவம் அளித்து, தமிழ் கல்விக் காணொலிகளை உருவாக்கி வருகிறது. உலக தமிழர்கள் அனைவரும், உலக தரமானக் கல்வியை பெற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகம் கான் கல்விக் கழக காணொலிகளுக்கு தமிழ் ஒலி வடிவம் அளித்து வருகிறது.

இதுவரையிலும், 43 மணி நேரம் ஒட கூடிய கல்வி சார்ந்த கான் காணொலிகளை, தமிழுக்கு மொழிமாற்றம் செய்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகத்தில் உள்ள, தமிழை தாய் மொழியாய் கொண்டுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், காணொலிகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. https://www.youtube.com/user/KhanAcademyTamil

மேலும், கல்வி கற்கும் முறையை மேம்படுத்திடும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழில் உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள் வழங்கப்பட உள்ளது.

தொடர்புக்கு :

திரு. மா. தமிழ்ப்பரிதி
மாநில ஒருங்கிணைப்பாளர் கணித்தமிழ்ப்பேரவை மற்றும் உதவி இயக்குநர்
7299397766

திரு. சிவ .தினகரன்
ஆய்வு தகமையர்
7871336611

திரு. வ .கெளதமராஜன்,
ஆய்வு வளமையர்
9003573957

இந்த காணொலி திட்டத்தில் பங்கேற்ற விரும்புவர்கள் அழைக்கலாம்.