திங்கள், 14 நவம்பர், 2016

கணித்தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா


த. உதயச்சந்திரன் இ.ஆ.ப  

தமிழகத்தின் முதல் கணித்தமிழ்ப் பேரவையினை செப்டம்பர் 4, 2015 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் இயக்குநர் திரு. த. உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.






தமிழக மாணவர்களின் கணித்தமிழ் ஈடுபாட்டை, கல்வி, ஆய்வு, வேலைவாய்ப்பு சார்ந்து மேம்படுத்தும் வகையில், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கணித்தமிழ்ப் பேரவையைத் தொடங்கவும், இப்பேரவைகளின் செயல்பாடுகளுக்காக தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒரு கல்லூரி/ பல்கலைக்கழகத்திற்கு உரூ. 25 ஆயிரத்தை ஆதார நிதியாக வழங்கத் தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கி வருகின்றது.

கணித்தமிழ்ப் பேரவை மேற்கொள்ள இருக்கும் பணிகள்
  • கணிப்பொறி, தமிழ்த்துறை அல்லது விருப்பமுடைய பேராசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இப்பேரவையை வழிநடத்துவர்.
  • தமிழ்க்குறுஞ்செயலிகள் உள்ளிட்ட தமிழ் மென்பொருட்களை உருவாக்கப் பயிற்சி அளித்தல்.
  • தமிழ் நிரலாக்கப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தல்.
  • இணையத்தில் படைப்புகளை உருவாக்கப் மாணவர்கள் பயிற்சி அளித்தல்.
  • கணித்தமிழ் ஆர்வத்தினை உண்டாக்கும் போட்டிகளை மாணவர்களுக்கு நடத்தி பரிசுகளை வழங்குதல்.
  • மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி செய்திமடல், ஆய்விதழை நடத்த ஊக்குவித்தல்
  • மாணவர்கள் கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்த, மேம்படுத்த ஊக்குவித்தல்.
  • தமிழ் உள்ளீட்டை கணிணி, பிற மின்னணுக் கருவிகளில் மேற்கொள்ள பயிற்சி அளித்தல்.
  • மாணவர்கள் விக்கிப்பீடியா போன்ற பொதுவள ஊடகங்களில் பங்கேற்க ஊக்குவித்தல் 
ஆகியப் பணிக்களை கணித்தமிழ்ப்பேரவைகள் மேற்கொள்ளும்.

கணித்தமிழ்ப்பேரவையின் முத்திரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக