வியாழன், 17 நவம்பர், 2016

கணித்தமிழின் வளங்கள்: அலைபேசியில் ஒருங்குகுறி தமிழ் உள்ளீடு (Tamil input for mobile phones)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766

தமிழ் விசையை (Android TamilKey) addons.mozilla.org/en-US/firefox/addon/tamilvisai-tamilkey/ ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி அமைப்பு நிலையில் (settings) மொழி மற்றும் உள்ளீடு (Languaguage and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம். செல்லினம் (Sellinam) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam  ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள அலைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவி அமைப்புகள் (settings) என்னும் பகுதியில் மொழி மற்றும் உள்ளீடு (Language and Input) என்னும் விருப்பத்தேர்வில் தமிழ் விசை என்று தெரிவு செய்தால் அலைபேசியின் விசைப்பலகையில் தமிழ்99, தமிழ் ஒலிபெயர்ப்பு, தமிழ் ஒலிபெயர்ப்பு (ஆங்கில எழுத்துக்கள்) ஆகிய முறைகளில் தமிழை உள்ளிடலாம். சொற்களைக் கோக்கும் போது, அந்தச் சொற்களுக்கு ஏற்றப் பரிந்துரைப் பட்டியலின் (suggestion list) தோற்றம் அஞ்சல் மற்றும் கையடக்கத் தமிழ்99 விசைப்பலகை அமைப்பைக் கொண்ட உள்ளீட்டு முறை மின்னஞ்சல், குறுஞ்செய்தி, டிவிட்டர், முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற அனைத்துச் செயலிகளிலும் நேரடியாகத் தமிழில் உள்ளிடும் வாய்ப்பு, தமிழ் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் பரிந்துரைப் பட்டியலுடன் உள்ளிடும் வசதி. இதன் வழி, அலைபேசியின் முதன்மை உள்ளீட்டு முறையாக செல்லினம் அமையும் வாய்ப்புக்கள் ஆகியன உள்ளன.


ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கிண்டாசுக் கணிப்பொறிகளில் மட்டுமின்றி ஐ-போன், ஐ-பேட், ஐ-பாட் டச் மற்றும் ஆப்பிள்-டிவி கருவிகளிலும் முரசு அஞ்சலில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எச்.டி.சி. நிறுவனம் அவர்களின் (ஆண்டிராய்டு வகை) கையடக்கக் கருவிகளிலும் செல்லினத்தின் கூறுகள் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது. எச்.டி.சி. நிறுவனத்தின் ஆண்டிராய்டு கருவிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எசின் (iOS 7) ஏழாம் பதிப்பிலும் "முரசு அஞ்சல்", "தமிழ் 99" ஆகிய இரண்டு தமிழ் விசைமுக அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. play.google.com/store/apps/details?id=com.google.android.apps.handwriting.ime&hl=en என்னும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கையெழுத்து உணரி வாயிலாக கையினால் எழுவதின் மூலம் தமிழில் உள்ளீடு செய்யலாம். youtube.com/watch?v=D7wnsG6jIcI, youtube.com/watch?v=Ie9SqmaMwDw என்னும் இணைப்புகளின் வாயிலாக தமிழ்த் தட்டச்சினைக் கற்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக