சிவ. தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவ. தினகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 நவம்பர், 2016

தமிழில் அகர வரிசை எளிதில் அமைக்கலாம்


தமிழில் எளிதில் அகர வரிசை அமைக்கலாம்…

வருகைப்பதிவேடு ஆகட்டும் அல்லது நாம் அணியப்படுத்தும் பட்டியல் ஆகட்டும் எப்போதும் அகர வரிசையில் அது அமைக்கப்படுமானால் அதில் எப்போதும் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால் நமக்கு இருக்கும் இடர்பாடு, ஆங்கிலம் எனில் நொடிப்பொழுதில் செய்துவிடுபவர்கள் கூட தமிழில் செய்ய தயக்கமும் குழப்பமும் அடைகின்றனர். ஆங்கிலத்தில் 26 எழுத்து எனவே அகர வரிசை (Alphabet) என்பது மிக எளிது ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளனவே. அது கடினமல்லவா என இனி அஞ்ச வேண்டாம்.
கணினி தொழில் நுட்பத்தின் உதவியால் இனி தமிழில் அகர வரிசை செய்வது அப்படி ஒன்றும் கடினமான செயலே அல்ல.

ஆம்…

நீங்கள் அகர வரிசை செய்யவேண்டிய சொற்களை வரிசைப்படுத்துங்கள். அச்சொற்கள் நிச்சயமாக ஒருங்குறி எழுத்தில் இருப்பது கட்டாயம். ஒருங்குறி எழுத்தெனப்படுவது வேறொன்றும் இல்லை Unicode Characters என சொல்வோம் இல்லையா அவைதான்.
பொதுவாகவே நாம் கைபேசி, டேப் ஆகிவற்றில் உள்ளீடு செய்வது ஒருங்குறி எழுத்தாகவே பதிவாகிறது. கணினியில் நீங்கள் வேறெந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தாலும் அதை நீங்கள் ஒருங்குறி எழுத்தில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான தளங்கள் நிறையவே உள்ளன.

சரி ஒருங்குறி எழுத்தில் தட்டச்சு செய்யபட்ட பட்டியலினை தேர்வு செய்து கொள்ளுங்கள். MS word எனில் மெனு பார் சென்று அங்கே ஆங்கில்லத்தில் செய்வது போன்றே A-Z என்ற தேர்வை சொடுக்குங்கள். நொடிப்பொழுதில் உங்கள் பட்டியல் அகர வரிசை செய்யப்பட்டதை அறிவீர்கள்.

சிறப்பு எழுத்துக்கள், அதாவது எண்களை முதலாவது கொண்டிருக்கும் சொற்கள் மற்றும் வடமொழி எழுத்துகளை முதல் எழுத்தாக கொண்டுள்ள சொற்கள் தனியாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளதை காண்பீர்கள்.

MS word மட்டுமல்ல MS excelலும் இதனை எளிதாக செய்ய முடியும்.  வருகைப் பட்டியல், அட்டவணை, பொருளடக்கப் பட்டியல், தேர்வு செய்யப்பட்ட பெயர்கள், முடிவு அறிவிப்பு என  சார்பற்ற பார்வையோடு வெளியிட, அகர வரிசைப்படுத்தும் முறைகள் நமக்குத் தேவைப்படும். எனவே இந்த வசதியினை நாம் பயன்படுத்தி நமது தமிழ் உள்ளீட்டினை செம்மைப்படுத்துவோம்

மேலும் ஐயங்கள் இருப்பின் இந்த காணொலியினை பாருங்கள். எளிமையாக புரிந்து கொள்வீர். வாழ்த்துகள்


  • சிவ. தினகரன், ஆய்வுத்தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 25

செவ்வாய், 15 நவம்பர், 2016

*செயலி அறிவோம் - 3* CamScanner -Phone PDF Creator

*செயலி அறிவோம் - 3*  CamScanner -Phone PDF Creator

உங்கள் உள்ளங்கையில் அருமையான ஸ்கேனர் ஒன்று வைத்துள்ளீர் தெரியுமா..?

நாம் அலுவலகத்திலிருந்து பல ஆவணங்களை மற்ற இடங்களுக்கு அலுவலர் நிமித்தமாக பகிர்கிறோம்.

அப்போது நமக்குள்ள பெரிய இடர்பாடு
தமிழ் எழுத்துரு போகுமா?
கோப்பின் அளவு பெரியதாக இருக்கிறதே எப்படி அனுப்புவது.
நம் அலுவலகத்தில் நல்ல ஸ்கேனர் இல்லையே என்ன செய்ய?
ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணம், மங்கியத்தாளில் தெளிவாக இல்லாமல் இருக்கிறதே என்ன செய்ய?
போன்ற பிரச்சனைகள் எழலாம்.  இனி கவலை ஏதுமில்லை. ஆம் தரமான ஸ்கேனர் நம் கைகளிலேயே இருக்கிறது.

ஆம். Play Store  சென்று CamSanner - Phone PDF Creator  எனும் செயலியை நிறுவுங்கள். நீங்கள் எந்த Document ஐ Scan  செய்ய வேண்டுமோ அதனை படமெடுங்கள். படத்தினை மிகத்தெளிவாக அதன் எல்லைகளை நாமே நிர்ணயித்து மிக தெளிவாக எடுக்கலாம்.

நமக்கு Gray Scale வேண்டுமானாலும் சரி, கருப்பு வெள்ளையில் வேண்டுமானாலும் சரி. இப்போது ஆவணம் தயாராகிவிட்டது. இப்போது இதனை PDF  ஆக மின்னஞ்சல், வாட்ஸ் ஆப், டெலிகிராம் என அனைத்து செயலி வாயிலாக அனுப்பலாம். இது நேராக கேமாரா மூலம் படம் பிடிக்கும் தரத்தை விட தெளிவாக இருக்கும். . மிகச்சிறிய இடத்தை மட்டுமே கொள்ளும்.  PDF  ஆக அனுப்புவதால் எழுத்துரு பிரச்சனை ஒருபோதும் இல்லை.

அது மட்டுமல்ல அவ்வப்போது ATM, Super Market ல் நாம் வாங்கும் பட்டியல் ஓரிரு நாட்களில் மங்கிவிடும். இதனை உடனடியாக பாதுகாக்க நாம் இந்த செயலியில் பாதுகாத்தால் எப்போதும் நம்முடனே இருக்கும். தேவையான நேரத்தில் எடுத்து பார்த்துக் கொள்ளலாம்.  

ஒரு தொடர்பற்ற பகுதியில் இருக்கும் போது கூட நகல் பெருக்கியும், அச்சு இயந்திரத்தையும் தேடாமல் நம் கைகளில் உள்ள திறன் பேசி மூலம் மிக எளிதாக அனைத்துவரைக ஆவணங்களையும் கையாளலாம்.

தொழில் நுட்பத்தின் மூலம் நமது பணியினை எளிதாக்குவோம்

  • சிவ. தினகரன், ஆய்வுத் தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 

*செயலி அறிவோம் - 2* DAILY HUNT

*செயலி அறிவோம் - 2* DAILY HUNT

ஆண்ட்ராய்டு போன் எனில் வாட்ஸ் ஆப் தாண்டிய வேறெந்த செயலியும் இருப்பதாக பல பேர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் பல பயனுள்ள செயலிகள் நம் ஆண்ட்ராய்டில் பொதிந்து கிடக்கின்றன.

அதில் முக்கியமான செயலி டெய்லி ஹன்ட் Daily Hunt.. இதில் ஒரு கல்லில் நான்கு மாங்காய்.

ஆம்.. நீங்கள் செய்தி வாசிக்கலாம்..
புத்தகம் வாசிக்கலம்,
வேலைக்கு படிக்கலாம்..
வேலை வாய்ப்பை தேடலாம்…

ஆனந்த விகடன், நக்கீரன், குங்குமம் உட்பட நடப்பு வாரம், கடந்த வாரம் என புத்தகங்களை டிஜிடல் வெர்சனாக நீங்கள் வாங்கி மொபைலிலேயே படிக்காலம்.  25% மேல் தள்ளுபடியில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன்.  உங்களிடத்தில் டேப்(TAB) இருந்தால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.

அதற்கான தொகை நீங்கள் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து கூட செலுத்த வேண்டிய தேவையில்லை. உங்களது சிம் கார்டில் இருக்கும் தொகையில் இருந்தே பிடித்துக் கொள்வார்கள். ஒரு ரூபாய்க்கு கூட புத்தகங்கள் கிடைக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் செயலிகள் பல இருக்கின்றன.  செய்திகளைவிட இதில் கூடுதலாக நாம் காண்பது இலவச புத்தகங்கள். தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் அளிக்கபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பைசா செலவில்லாமல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
ஆப் லைனில் இருக்கும் போதும் படிக்கலாம். தமிழ் ஆங்கிலம்,மலையாளம் என 15 மொழிகளில் இந்த செயலி இயங்குகிறது.  இப்போதே தரவிரக்கம் செய்து இலவச நூல்களை பெற்று மொபைலில் படித்துப் பாருங்கள்.

புத்தகத்தில் படிக்கும் நேர்த்தி மொபைலில் படிப்பதில் இல்லை என்றாலும் காத்திருக்கும் நேரத்தில் விரும்பியதை படிக்கலாமே…
எத்தனை நாள்தான் Forward  செய்யும் மொக்கை செய்திகளை நாம் படித்துக்கொண்டு இருப்பது.

https://play.google.com/store/apps/details?id=com.eterno இதில் சொடுக்கி உங்கள் திறன்பேசியில் செயலியை நிறுவி தொடருங்கள் உங்கள் வாசிப்பை.

புதியன விரும்பு என்ற பாரதியின் வாக்கினை பின்தொடர்வோம்

  • சிவ. தினகரன், ஆய்வுத் தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 

செயலி அறிவோம். - 1 ( GOOGLE HANDWRITING INPUT)

செயலி அறிவோம். - 1 ( GOOGLE HANDWRITING INPUT)

Tamil Typing Without Keyboard
தமிழில் உரையாடுவதற்கு பலபேருக்கு விருப்பம். ஆனால் சரியான தமிழ் தட்டச்சு செயலியை நிறுவி அதில் பதிவுகளை தட்டச்சு செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல எந்த விசைப்பலகை என அவர்கள் தேர்வு செய்து உள்ளீடுவது என்பதில் மிகப்பெரிய குழப்பமும் அவர்களுக்கு வருகிறது. அவர்களது இடர்பாடுகளை போக்க நல்ல செயலி ஒன்று இருக்கிறது.

உங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்தசெயலியை நிறுவுங்கள். இதில் language input ல் தமிழ் எனதேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடுதுல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல்கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல்கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆகமாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள்எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ,வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றிபகிரலாம்….

அது மட்டுமல்ல இது Bilingual அதாவாது இருமொழியும் உணர்ந்து அதற்கேற்றார் போல் Text ஆக மாற்றி கொடுக்கும். அதாவாது தமிழில் எழுதினால் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்திலும் எழுத்துரு அமையும்.

இத்தொழில் நுட்பம் வெகு வேகமாக அனைவரையும் கவருகிறது. விரைவில் தட்டச்சு முறை என்பதே ஒழிந்து விடும் அளவிற்கு தொழில் நுடப்ம் புலிப்பாய்ச்சல் அடைந்துள்ளது.

தமிழ் எல்லா தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது. அது மட்டுமல்ல நாம் எழுதும் எழுத்து அப்படியே ஒருங்குறி எழுத்தாக (Unicode Font)  மாறுகிறது. எனவே நீங்கள் மின்னஞ்சலாகவோ, வாட்ஸ்ஆப் மற்றும் குறுஞ்செய்தியாக எப்படி அனுப்பினாலும் தெளிவாக படிக்கும் வகையில் அமையும்.  தமிழில் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்புவோருக்கு மிகச்சிறப்பான செயலி இதுவாகும்

https://youtu.be/D7wnsG6jIcI இந்த இணைப்பினை சொடுக்கி காணொலி மூலம் இந்த செயலியை (Apps) - எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறியாலாம்

  • சிவ. தினகரன், ஆய்வுத் தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை