மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766
கணிப்பொறி, அலைபேசி உள்ளிட்ட மின்னணுக்கருவிகளில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு அதற்குரிய மென் பொருட்களை நாம் நிறுவ (install) வேண்டியுள்ளது. எனவே தன்னார்வத்தின் அடிப்படையில் பலர் தமிழ் மென்பொருட்களை நிறுவியப்பின் தமிழ் தட்டச்சினை தங்கள் கணிப்பொறிகளில் பயன்படுத்தி வருகின்றனர். இணையப்பரப்பில் தமிழை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும், தமிழ் உள்ளீடு (input)மிகத்தேவையான ஒன்றாகும். கணிப்பொறிகளிலும் அலைபேசிகளிலும் பலகைக் கணிப்பொறி (tablet) போன்ற இதரக்கருவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்வதற்குரிய வழிமுறைகளையும் தமிழ் மின்னூலக வளங்களையும் அறிய வேண்டியது காலத்தின் தேவையாகும்.