செவ்வாய், 15 நவம்பர், 2016

செயலி அறிவோம். - 1 ( GOOGLE HANDWRITING INPUT)

செயலி அறிவோம். - 1 ( GOOGLE HANDWRITING INPUT)

Tamil Typing Without Keyboard
தமிழில் உரையாடுவதற்கு பலபேருக்கு விருப்பம். ஆனால் சரியான தமிழ் தட்டச்சு செயலியை நிறுவி அதில் பதிவுகளை தட்டச்சு செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல எந்த விசைப்பலகை என அவர்கள் தேர்வு செய்து உள்ளீடுவது என்பதில் மிகப்பெரிய குழப்பமும் அவர்களுக்கு வருகிறது. அவர்களது இடர்பாடுகளை போக்க நல்ல செயலி ஒன்று இருக்கிறது.

உங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்தசெயலியை நிறுவுங்கள். இதில் language input ல் தமிழ் எனதேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடுதுல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல்கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல்கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆகமாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள்எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ,வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றிபகிரலாம்….

அது மட்டுமல்ல இது Bilingual அதாவாது இருமொழியும் உணர்ந்து அதற்கேற்றார் போல் Text ஆக மாற்றி கொடுக்கும். அதாவாது தமிழில் எழுதினால் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்திலும் எழுத்துரு அமையும்.

இத்தொழில் நுட்பம் வெகு வேகமாக அனைவரையும் கவருகிறது. விரைவில் தட்டச்சு முறை என்பதே ஒழிந்து விடும் அளவிற்கு தொழில் நுடப்ம் புலிப்பாய்ச்சல் அடைந்துள்ளது.

தமிழ் எல்லா தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது. அது மட்டுமல்ல நாம் எழுதும் எழுத்து அப்படியே ஒருங்குறி எழுத்தாக (Unicode Font)  மாறுகிறது. எனவே நீங்கள் மின்னஞ்சலாகவோ, வாட்ஸ்ஆப் மற்றும் குறுஞ்செய்தியாக எப்படி அனுப்பினாலும் தெளிவாக படிக்கும் வகையில் அமையும்.  தமிழில் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்புவோருக்கு மிகச்சிறப்பான செயலி இதுவாகும்

https://youtu.be/D7wnsG6jIcI இந்த இணைப்பினை சொடுக்கி காணொலி மூலம் இந்த செயலியை (Apps) - எப்படி பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறியாலாம்

  • சிவ. தினகரன், ஆய்வுத் தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக