வியாழன், 17 நவம்பர், 2016

கணித்தமிழின் வளங்கள்: தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள் (Tamil Unicode softwares)

மா. தமிழ்ப்பரிதி, மின்மடல்: tparithi@gmail.com, உலா பேசி: 7299397766


தமிழ் ஒருங்குகுறி எழுதிகள்/ விசைப்பலகைகள் (Tamil Unicode writers and keyboards) என்னும் மென்பொருட்கள் கணிப்பொறிகளில் ஒருங்குகுறி தமிழ் தட்டச்சு செய்வதற்காக உருவாக்கப்பெற்றுள்ள மென்பொருட்கள் ஆகும். இந்த மென்பொருட்களை கணிப்பொறியில் மிக எளிதாக நிறுவலாம். கணிப்பொறிகளிலும், மடிக்கணிப்பொறிகளிலும் ஒருங்குகுறி தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் மென்பொருள்களுள் ஒன்றினைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி (installation) தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம்.

என்ஹெச்எம் ரைட்டர், (NHM Writer) software.nhm.in/products/writer என்னும் இம்மென்பொருளைத் தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி (installation) தமிழ்99, தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (transliteration), தமிழ் பழைய தட்டச்சுப்பொறி (Old typewriter), பாமினி, தமிழ் இன்ஸ்கிரிப்ட் (Inscript), தமிழ்99 டேஸ், தமிழ் ஒலிபெயர்ப்பு டேஸ் (TACE) ஆகிய முறைகளில் தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். தமிழ் விசை (Tamil Visai) என்னும் மென்பொருளை தரவிறக்கம் (download) செய்து ஃபயர் பாக்சில் தமிழ் ஒருங்குகுறியில் தட்டச்சுசெய்யப் பயன்படுத்தலாம். இ-கலப்பை, (e-Kalappai) http://thamizha.org/ இம்மென்பொருளை தரவிறக்கம் (download) செய்து, அவற்றை கணிப்பொறியில் நிறுவி தமிழ் உள்ளீட்டைச் செய்யலாம். இம்மென்பொருளில் தமிழ்99 (Tamil99), தமிழ் ஆங்கில ஒலிபெயர்ப்பு (Phonetic), தட்டச்சுப்பொறி (Typewriter), பாமினி (Bamini), இன்ஸ்கிரிப்ட் (Inscript) ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குகுறியை உள்ளீடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக