புதன், 16 நவம்பர், 2016

தமிழில் அகர வரிசை எளிதில் அமைக்கலாம்


தமிழில் எளிதில் அகர வரிசை அமைக்கலாம்…

வருகைப்பதிவேடு ஆகட்டும் அல்லது நாம் அணியப்படுத்தும் பட்டியல் ஆகட்டும் எப்போதும் அகர வரிசையில் அது அமைக்கப்படுமானால் அதில் எப்போதும் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால் நமக்கு இருக்கும் இடர்பாடு, ஆங்கிலம் எனில் நொடிப்பொழுதில் செய்துவிடுபவர்கள் கூட தமிழில் செய்ய தயக்கமும் குழப்பமும் அடைகின்றனர். ஆங்கிலத்தில் 26 எழுத்து எனவே அகர வரிசை (Alphabet) என்பது மிக எளிது ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளனவே. அது கடினமல்லவா என இனி அஞ்ச வேண்டாம்.
கணினி தொழில் நுட்பத்தின் உதவியால் இனி தமிழில் அகர வரிசை செய்வது அப்படி ஒன்றும் கடினமான செயலே அல்ல.

ஆம்…

நீங்கள் அகர வரிசை செய்யவேண்டிய சொற்களை வரிசைப்படுத்துங்கள். அச்சொற்கள் நிச்சயமாக ஒருங்குறி எழுத்தில் இருப்பது கட்டாயம். ஒருங்குறி எழுத்தெனப்படுவது வேறொன்றும் இல்லை Unicode Characters என சொல்வோம் இல்லையா அவைதான்.
பொதுவாகவே நாம் கைபேசி, டேப் ஆகிவற்றில் உள்ளீடு செய்வது ஒருங்குறி எழுத்தாகவே பதிவாகிறது. கணினியில் நீங்கள் வேறெந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தாலும் அதை நீங்கள் ஒருங்குறி எழுத்தில் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான தளங்கள் நிறையவே உள்ளன.

சரி ஒருங்குறி எழுத்தில் தட்டச்சு செய்யபட்ட பட்டியலினை தேர்வு செய்து கொள்ளுங்கள். MS word எனில் மெனு பார் சென்று அங்கே ஆங்கில்லத்தில் செய்வது போன்றே A-Z என்ற தேர்வை சொடுக்குங்கள். நொடிப்பொழுதில் உங்கள் பட்டியல் அகர வரிசை செய்யப்பட்டதை அறிவீர்கள்.

சிறப்பு எழுத்துக்கள், அதாவது எண்களை முதலாவது கொண்டிருக்கும் சொற்கள் மற்றும் வடமொழி எழுத்துகளை முதல் எழுத்தாக கொண்டுள்ள சொற்கள் தனியாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளதை காண்பீர்கள்.

MS word மட்டுமல்ல MS excelலும் இதனை எளிதாக செய்ய முடியும்.  வருகைப் பட்டியல், அட்டவணை, பொருளடக்கப் பட்டியல், தேர்வு செய்யப்பட்ட பெயர்கள், முடிவு அறிவிப்பு என  சார்பற்ற பார்வையோடு வெளியிட, அகர வரிசைப்படுத்தும் முறைகள் நமக்குத் தேவைப்படும். எனவே இந்த வசதியினை நாம் பயன்படுத்தி நமது தமிழ் உள்ளீட்டினை செம்மைப்படுத்துவோம்

மேலும் ஐயங்கள் இருப்பின் இந்த காணொலியினை பாருங்கள். எளிமையாக புரிந்து கொள்வீர். வாழ்த்துகள்


  • சிவ. தினகரன், ஆய்வுத்தகைமையர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை 25

1 கருத்து:

  1. தமிழில் அரக வரிசை அமைத்தல்

    மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளி இணைப்பு உரையில் எழுத்துப்பிழை உள்ளது. அதைச் சரிசெய்யவும்.

    பதிலளிநீக்கு